 |
குஷ்பு விவகாரம்
தங்கர் பச்சான் - குஷ்பு விவகாரம் இப்போது மிகப் பெரிய அரசியல் கலாச்சாரப் பிரச்சினையாக மாறி விட்டிருக்கிறது. இத்தருணத்தில் நாம் சமீப காலமாக தமிழ் நாட்டில் நடந்து வரும் கலாச்சார அடக்குமுறை நிகழ்வுகளை வரிசைப்படுத்தித் தொகுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வோடு நெருக்கமான முறையில் தொடர்பு கொண்டுள்ளது. குடிப்பது தொடர்பான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பா.ம.க.வின் நிலைப்பாடு, பாலியல் குறித்த பிரச்சினைகள் புனைகதைகளில் பேசப்படக் கூடாது என்ற விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் அறிக்கை கூறும் அறிவுரை, ஸ்பென்ஸர் வணிக வளாகத்திலுள்ள மதுக்கடையில் பெண்களும் வந்து மது வாங்கிச் செல்வதாக ஒரு அதிகாரி கூறியபோது ~இது தாய்மார்களை இழிவு படுத்தும் செயல்@ இதற்கு எதிராக பா.ம.க. மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபடுவர்| என்ற டாக்டர் ராமதாஸின் அறிக்கை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாணவிகளின் உடை விஷயத்தில் அறிவித்திருக்கும் ஃபத்வா, ~ந்யூ| படம் சம்பந்தமாக நீதிபதிகள் கொடுத்திருக்கும் ஒழுக்கவியல் கட்டளைகள் என்று தொடர்ந்து இறுதியாக குஷ்புவுக்கு எதிராக பா.ம.க. மற்றும் விடுதலைச் .சிறுத்தை மகளிரணியினரின் போராட்டம்வரை வந்து, இப்போது குஷ்பு ~நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை@ கண்ணகி பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்கள் சகோதரியான நானா அப்படிச் சொல்வேன்?| என்று கண்ணீரும் கம்பலையுமாய்ச் சொல்வதுடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.
முதலில் இந்தியா டுடே பத்திரிகையில் குஷ்பு கொடுத்த பேட்டியே ஒரு உளறல். பாலியல் விஷயத்தில் பெண்கள் வெளிப்படையாக இருப்பது பற்றி மகிழ்ச்சி தெரிவிக்கும் அவர், அதே சமயத்தில் ~இது ஆரோக்கியமானதுதானா?| என்ற கேள்வியையும் எழுப்பி, ~வாரந்தோறும் பாய் ஃப்ரெண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை| என்றும் கூறியிருக்கிறார். வாரந்தோறும் மாற்றிக் கொள்ளாமல் மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டால் பிரச்சினை இல்லை போலிருக்கிறது.
மேற்கண்ட பேட்டியில் குஷ்பு ~பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்~ என்ற ளநளெயவழையெட கருத்தையும் கூறியிருந்ததால், இது பற்றி பின்னர் அவரிடம் கேள்வி கேட்ட நாளிதழில் ~தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் அப்படியிருக்கிறாhர்கள் என்பது அவர்களுக்கே தெரியும்| என்று கூறி தேன் கூட்டில் கல்லெறிந்து விட்டார். இவ்வாறு கூறும் இதே குஷ்புதான் இதற்குச் சில தினங்களுக்கு முன்பு ~பணம் மட்டுமே குறி என்று நினைப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது| என்று கூறியதற்காக தங்கர் பச்சானை நடிகைகளின் காலில் விழ வைத்தவர். ஆக, சினிமா நடிகைகளின் கற்பின் பெருமைக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் எப்படி தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து கருத்துக் கூற முடியும்? எல்லாம் சினிமாக்காரர்களை ஏதோ கடவுள் அவதாரங்களைப்போல் தலையில் து}க்கி வைத்துக் கொண்டாடி கோவில் கட்டும் தமிழ் நாட்டினர் அச் செயலுக்காக கொடுக்கும் விலை......
குறிப்பிட்ட அந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் தங்கர் அப்படிப் பேசவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அவரை ஏதோ கொலைக் குற்றவாளியைப் போல் நடத்தி கட்டப் பஞ்சாயத்து செய்து, அவர் நடிகைகளின் காலில் விழுந்து அழுது மன்னிப்புக் கேட்ட பிறகும் அவரை வாடா, போடா, விட்டேனா பார் என்று ஆவேசப்பட்டு ரவுடித்தனம் செய்தவர் குஷ்பு. இது மட்டுமல்ல, கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே குஷ்பு அடித்த லு}ட்டி கொஞ்ச நஞ்சமல்ல. நடிகைகளைப் பற்றி யார் என்ன பேசினாலும் குஷ்புவிடமிருந்து காரசாரமான ஒரு பேட்டி வரும்@ நாங்கள் கலைஞர்கள், நாங்கள் கலைச் சேவை செய்கிறோம், இத்யாதி, இத்யாதி என்று. தொடர்ந்து அ.மார்க்ஸ_ம் ஒரு கட்டுரை எழுதி விடுவார்.
யார் கலைஞர்? எது கலைச் சேவை? தமிழ்ப்பட பாடல் காட்சிகள் நீலப்படங்களையும் மிஞ்சிக் கொண்டிருக்கின்றன. நான் நீலப்படங்களுக்கோ, செக்ஸ_க்கோ எதிரானவன் அல்ல. ஆனால் அதற்கென்று பிரத்தியேகமான இடங்கள் உள்ளன. நீலப்படத்தை ஒத்த தமிழ்ப்படங்களை 6 வயது மற்றும் 17 வயது மகள்களுடனும் மனைவியுடனும் ஒன்றாகப் பார்க்கும் தமிழ் ஜனங்களின் விபாPதமான மனப்போக்கையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
இது மட்டுமல்ல. தமிழ் சினிமாவுக்குப் பின்னால் ஒரு நிஜ சினிமா இருக்கிறது. நான் அடிக்கடி செல்லும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு நாள் ஒரு பெண்ணின் உடையைக் கண்டு அதிர்ந்தேன். கீழே ஒரு கர்ச்சீஃப், மேலே ஒரு ரிப்பன். மேற்கத்திய நாடுகளில் கூட இந்த அளவுக்குப் பெண்கள் முன்னேறி விடவில்லையே, யார் இவர் என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு இரண்டு மணி நேரம் சென்று, அவர் ஒரு தயாரிப்பாளருடன் வெளியே வந்தபோதுதான் அவர் ஒரு பிரபல தமிழ் சினிமா நடிகை என்பது புரிந்தது.
என் நண்பரொருவர் சமீபத்தில் கூறிய விஷயம்: தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாகியிருக்கும் ஒரு நடிகை மூன்று மணி நேரத்திற்கு வாங்கும் தொகை 15 லட்சம். கேள்விப்பட்ட விஷயமல்ல. அவரே நேரடியாக அறிந்த விஷயம். அப்பாவிகளான சிறு பத்திரிகை அன்பர்களுக்கு இது நம்ப முடியாத விஷயமாக இருக்கலாம். அவர்களுக்காக ஒரே ஒரு உதாரணம்: ஒரு ஆண்டுக்கு முன்பு வினிதா என்ற நுஒ - கதாநாயகி நடிகை விபச்சார வழக்கில் கைதானபோது, கஸ்டமர் வேடத்தில் வந்த போலீஸ்காரரிடம் அவர் கேட்ட தொகை 2 லட்சம் என்பதாக வந்த செய்தி.
இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் தெருமுனையில் நின்று துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருக்கிறார் அ.மார்க்ஸ். தமிழ்ச் சிந்தனையுலகில் அ.மார்க்ஸின் பங்கு மிக முக்கியமானது என்பதை எப்போதும் வலியுறுத்துபவன் நான். அதே சமயத்தில் அவர் அவ்வப்போது பராசக்தி சிவாஜியாக மாறி சினிமா நடிகைகளின் சார்பாக குரல் கொடுத்து, களச் செயலிலும் இறங்கும்போது அது காமெடி ஸீனாக மாறி விடுகிறது.
காரணம், இன்னும் அவர் இந்து நேசன் காலத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார். இப்போதைய நடிகைகள் என்ன கே.ஆர்.விஜயாவின் பின்னணியிலிருந்தா வருகிறார்கள்? கே.ஆர்.விஜயாவின் கதையைக் கேட்டால் ரத்தக் கண்ணீர் வரும். ஆனால் இன்றைய நடிகைகளின் பின்னணியைப் பாருங்கள். எல்லோரும் பெரும் பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஐரோப்பிய மொழிகள் ஐந்தும், இந்திய மொழிகள் ஐந்தும் தெரிந்த Pசழனபைலக்கள். ஒரு சினிமாவில் நடிக்க அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், லட்சங்களில். இவர்களில் ஒரு நடிகை சில மணி நேரங்களுக்கு 15 லகரம் வாங்குகிறார். குடநளா வசயனந.
இப்படிப்பட்ட Pசழனபைலக்கள் ஏன் மூன்று மணிநேரத்துக்கு 15 லட்சம் வாங்கி கடநளா வசயனந - இல் இறங்குகிறார்கள்? நுயளல ஆழநெல. நான் எல்லா நடிகைகளையும் பற்றிக் கூறவில்லை. குடநளா வசயனநஇல் ஈடுபடும் சிலர் அல்லது பலரைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன். ஒரு படத்துக்கு அந்த நடிகைக்குக் கொடுக்கப்படும் சம்பளம் 3 லட்சம். மூன்று மாதம் சு10ரிய வெப்பத்தை ஒத்த தகிக்கும் உஷ்ணத்தைக் கக்கும் பெரும் பெரும் ஏர் லைட் பல்புகளின் வெளிச்சத்தில் உடலை வருத்தி நடிக்க வேண்டும். மைனஸ் டிகிரி ஆல்ப்ஸ் மலைக் குளிரில் ஜட்டி ப்ராவோடு டான்ஸ் ஆட வேண்டும். (ஓல்ட் மாங்க்கை பாட்டில் பாட்டிலாக ஊற்றிக் கொடுப்பேன் என்கிறார் என் தயாரிப்பாளர் நண்பர். ஏன் ஓல்ட் மாங்க? அதுதான் அந்தக் குளிருக்குச் சரிப்பட்டு வரும்.) இப்படியெல்லாம் பாடுபட்டால்தான் மூன்று லட்சம். ஆனால், குடநளா வசயனநஇல் மூன்று மணி நேரத்துக்கு 15 லட்சம். எப்படி இது போன்றதொரு மாபெரும் தொகை நிர்ணயமாகிறது என்று புலனாய்வு செய்தேன். கிடைத்த தகவல் ஒரு குரூர நகைச்சுவை. ஜனரஞ்சகப் பத்திரிகையின் அட்டையில் நடிகையின் படம் எத்தனை முறை வருகிறதோ அத்தனை லகரம் மூன்று மடங்காகக் கூடும். அந்தக் குறிப்பிட்ட நடிகையின் படம் இரண்டு ஜனரஞ்சகப் பத்திரிகையின் அட்டைகளில் 5 முறை வந்திருப்பதால் 3 ஒ 5 ஸ்ரீ 15 லட்சம்.
இந்த வார அட்டையில் எந்த நடிகையைப் போடுவது என்று தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கும் அந்தப் பரிதாபகரமான உதவி ஆசிரியனின் சம்பளமோ வெறும் 5000 ரூபாய் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
இதுதான் குஷ்பு கூறும் கலைச் சேவையின் பின்னணி. இதற்கிடையில் மார்க்ஸ் வேறு நம்மைத் திருத்துகிறார். விபச்சாரி என்று சொல்லக் கூடாதாம். செக்ஸ் தொழிலாளி என்றுதான் சொல்ல வேண்டுமாம். யார் செக்ஸ் தொழிலாளி? சாந்தி தியேட்டர் எதிரே உள்ள சுரங்க நடைபாதையில் பிச்சைக்காரிகளைப் போல் நின்று கொண்டு கஸ்டமர் தேடும் 50 வயதுப் பெண்கள் (பார்ப்பதற்கு 70 வயதைப் போல் தோற்றமளிப்பர்) செக்ஸ் தொழிலாளிகளா? அல்லது, மூன்று மணி நேரத்துக்கு 15 லகரம் வாங்கும் நடிகையா?
இந்த நடிகைகளை நான் தொழிலதிபர்கள் என்றே அழைப்பேன். இந்தத் தொழிலதிபர்களின் சார்பாக ஒரு சமூக விஞ்ஞானி பேசுவதும், சமூக விஞ்ஞானியின் பாத்திரத்தை ஒரு சினிமா நடிகை எடுத்துக் கொள்வதும் தமிழகத்தில் மட்டுமே நடக்கும் விபாPத வினோதங்களில் ஒன்று.
சமூக விஞ்ஞானி பாத்திரம் சினிமா நடிப்பைப் போன்றதல்ல என்பது குஷ்புவுக்கு தாமதமாகவே புரிந்தது@ புரிந்ததும் பழையபடி ~புனித சகோதரி| பிம்பத்தை எடுத்து அணிந்து கொண்டு விட்டார்.
இப்போது குஷ்பு சமூக விஞ்ஞானி பாத்திரம் ஏற்றதற்கும் புனித சகோதரி பிம்பத்தை மாட்டிக் கொண்டதற்குமான இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.
தமிழ் சமூக அரசியல் கலாச்சாரத் தளத்தில் நடக்கும் நிகழ்வுகள் பலவும் அந்த்தோனின் ஆர்த்தோவின் வுhநயவசந ழக ஊசரநடவல மற்றும் சாமுவேல் பெக்கெட்டின் வுhநயவசந ழக வாந யுடிளரசன வகையைச் சார்ந்தவை. தமிழ் எழுத்தாளர்களுக்கு எந்தவித வேலையும் இல்லாமல் இந்நிகழ்வுகளே தமது பிரதிகளை உருவாக்கிக் கொண்டு செல்வது பின் நவீனத்துவவாதிகளையே திகைப்படையச் செய்துவிடக் கூடியவை. இல்லாவிட்டால் ஒரு கையில் விளக்குமாறும் ஒரு கையில் செல்ஃபோனுமாக தெருவில் நின்று போராடும் பெண் தெய்வங்களை எந்த நாட்டில் நீங்கள் பார்க்க முடியும்?
அராஜகம். நடந்ததெல்லாம் மிக மோசமான அராஜகம். ~உன்னுடைய கருத்தை முழுமையாக மறுக்கிறேன்@ ஆனால் அந்தக் கருத்தை நீ கூறுவதற்காக உனக்குள்ள உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்| என்று ரூஸோ சொன்ன அந்த கருத்துச் சுதந்திரத்தின் உச்சக்கட்ட கருத்துலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எழுத்தாளர்களை வெட்கித் தலை குனிய வைக்கும் அராஜக நிகழ்வுகள் அவை. ஒரு ஊரில் ஒன்றிரண்டு ரவுடிகள் இருந்தால் எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு ஊரே ரவுடிகளின் கூடாரமாக மாறினால் நம்மைப்போன்ற நோஞ்சான்களால் என்ன செய்ய முடியும்?
இவ்விஷயத்தில் ஒரு சில பத்திரிகைகளும் ஒரு தொலைக்காட்சி சேனலும் நடந்து கொண்ட விதம் நாம் நாகரிகம் வளர்ச்சியடைந்த ஒரு கால கட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது. தங்கர் பச்சான் பா.ம.க.வைச் சேர்ந்தவர் என்பதால் குஷ்பு அக்கட்சியால் மிகத் தீவிரமாகக் குறி வைக்கப்பட்டார். குஷ்பு தங்கருக்குச் செய்த அராஜகம் அனைத்தும் இன்னும் கூடுதலாக அவர் மீது பிரயோகிக்கப்பட்டது. குஷ்பு ஆளுங்கட்சி டி.வி.யில் நிகழ்ச்சி நடத்துபவர் என்பதால் எதிர்க்கட்சி டி.வி.யும், அவர்களைச் சார்ந்த பத்திரிகையும் குஷ்புவின் மீது படு மோசமான தாக்குதலைத் தொடர்ந்தன. அத்தொலைக் காட்சியில் அவரை ~அவள், இவள்| என்று கூறித் திட்டிய பெண்களின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.
இது குறித்து பெண் கவிஞர்களின் எதிர்வினையைப் பார்த்தால், அது ஒரு குரூர - அவல நாடகக் காட்சியாக இருந்தது.
சமீபத்தில் சக பெண் கவிஞர்கள் மீது மாலதி மைத்ரி லத்தி சார்ஜ் நடத்தியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஆனால் குஷ்பு விஷயத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதம் அந்த லத்தி சார்ஜ் பற்றி ஒருவித குரூர திருப்தியையே எனக்குள் ஏற்படுத்தியது. அவ்வளவு பத்தாம்பசலித்தனமாகவும் கட்டுப்பெட்டித்தனமாகவும் கருத்து வெளியிட்டனர். மாலதி மைத்ரியின் லத்தி சார்ஜில் படுகாயமடைந்த பெண் கவிஞர்கள்.
செக்ஸ் உணர்வு என்பது தவறான விஷயம் என்று யார் சொன்னது? மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள அடிப்படையான ஒரு உணர்வு அது - பசி, தாகம் போன்று. செக்ஸ் ஒரு தவறான உணர்வு என்று சொல்பவர்கள் இரண்டு வயது குழந்தையின் பாலுறுப்பில் விறைப்பு நிலை ஏற்படும் போது அவ்வுறுப்பை வெட்டி எறிந்து விடுவார்களா? பிறந்த குழந்தை தாயின் முலையில் பால் குடிப்பதை செக்ஸ் உணர்வு சம்பந்தப்பட்டதுதான் என்று ஃப்ராய்ட் எழுதி ஒரு நு}று ஆண்டுகளுக்குப் பிறகும் செக்ஸ் பற்றிய பிற்போக்குத்தனமான நம்பிக்கையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை என்னவென்று சொல்வது!
வம்சாவளி என்கிற சாதீய அதிகாரத்தை உற்பத்தி செய்து, தக்க வைத்து, போஷிப்பது@ தந்தை வழி அதிகாரத்தை முன்னிறுத்துவது போன்ற அதிகாரச் செயல்பாடுகளை நிகழ்த்தும் ஒரு வன்முறை அமைப்பே குடும்பம் என்பதை மிக அழுத்தமான முறையில் நிறுவியர் பெரியார். ‘வுhந Pழடவைiஉள ழக குயஅடைல’ என்ற சு.னு. டுயiபெஇன் நு}ல் பற்றியெல்லாம் நிறப்பிரிகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே விரிவாக ஆய்வு செய்யப்பட்ட விஷயம். இது எதையுமே படிக்காமல் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கின்றனர் சில பெண் கவிஞர்கள்.
இவ்விஷயத்தில் தொல். திருமாவளவன் நாடோடி மன்னன் எம்ஜியார் பாத்திரத்தை (டபுள் ஆக்ட்) திறம்படச் செய்தார். தமிழ் பத்திரிகைகளில் குஷ்புவை எதிர்த்து ஆவேச பேட்டிகள். அதே சமயம் ~சாதீயம், ஆணாதிக்கம் போன்றவைகளைப் போலவே கற்பும் நம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ மோசடியே| என்று ஆங்கிலப் பத்திரிகையில் பேட்டி. நடிப்பு பலே ஜோர்.
பெரியாரின் வழியில் நடக்க வேண்டிய ஒருவர் பெரியாரின் படத்தையும் மாட்டிக் கொண்டு அதற்கு நேர் எதிர் வழியில் அரசியல் செய்வதை என்னவென்று சொல்வது? பெண்கள், பெண் சுதந்திரம், கற்பு, குடும்பம், மொழி என்பது பற்றியெல்லாம் பால் தாக்கரேவின் பாணியிலேயே - அவரது மொழியிலேயே - திருமாவளவனும் பேசுவதன் ஆபத்தை அவர் உணர்ந்திருக்கிறாரா? இந்துத்துவத்துக்கு எதிரான மூலகங்களை நாம் பெரியரிடமிருந்தல்லவா எடுத்துக் கொள்ள வேண்டும்? குஷ்புவா நம்முடைய எதிரி? வருகிற தேர்தலில் போதுமான எம்மெல்லேக்களை பெற்று விடுவதா நம்முடைய குறிக்கோள்? தலித் விடுதலையும், சாதி அடிப்படையிலான சமூகம் மாற வேண்டும் என்பதும்தானே நாம் கவனம் செலுத்திப் போராட வேண்டிய விஷயங்கள்?
~~பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகிய எல்லாவிதமான அபிமானங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.||
~~தேசாபிமானம் என்ற யோக்கியமற்ற சு10ழ்ச்சிக்கு நீங்கள் ஆளாகக் கூடாது. அது சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நரகம் என்பது போன்ற மூட நம்பிக்கையாகும்.||
-இதெல்லாம் பெரியார். இதுபோல் கற்பு, கருத்தடுப்பு, குடும்பம் போன்ற விஷயங்களையெல்லம் மிகக் கடுமையான மொழியில் விமர்சித்திருக்கிறார் பெரியார். ழூழூழூழூழூழூழூழூ அரசியல்வாதிகளும், பல்கலைக்கழகத் துணை வேந்தரும், நீதிபதிகளும் கலாச்சாரக் காவலர்களாக அவதாரம் எடுத்து நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் இவர்களுக்குத் துணையாக, பக்க பலமாக போலீஸ் கமிஷனரும் புறப்பட்டார். அவர் குறி நட்சத்திர ஓட்டல்களின் மீது பாய்ந்தது. அந்தக் காலத்தில் சைக்கிளில் டபுள்ஸ் போனால் பிடிக்கும் போலீஸ்காரரைப் போல் ஒவ்வொரு Pரடிக்கும் சென்று இரவு 11.30க்கு மேல் குடித்துக் கொண்டிருப்பவர்களை பீதியுறச் செய்தார் கமிஷனர். பார்களுக்கு லைசென்ஸ் இல்லாத காலத்தில் சிறு சிறு முச்சந்தி பார்களில் பார்த்த காட்சிகள், சமூகத்தின் மேட்டுக்குடி வர்க்கத்தினர் கூடும் நட்சத்திர ஓட்டல் பார்களிலும் நடந்தேறியது. மிகவும் செல்வாக்கான நிலையில் இருந்தவர்கள் கூட கமிஷனரைக் கண்டு பீதியுற்று ஓடினர். நட்சத்திர ஓட்டல்களுக்கு கடுமையான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில் ஒரு தமிழ் நாளிதழில் ஒரு புகைப்படம் வந்தது. ஒரு நட்சத்திர ஓட்டலின் பெயர் குறிப்பிட்டு அங்குள்ள pரடிஇல் கூடிய கூட்டத்தினரின் புகைப்படங்களை அந்நாளிதழ் வெளியிட்டிருந்தது. அதில் இருந்த ஒரு வாசகம் இங்கே முக்கியமானது: ~மேல்தட்டு மக்கள் என்பதால் இவர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ்துறை தயக்கம் காட்டுகிறதா?|
இந்த இடத்தில் நான் சில உண்மைகளை; வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். அந்தக் குறிப்பிட்ட ஓட்டலுக்கு நான் முன்பு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். ஒரு முறை ஷோபா சக்தி, அவருடைய ஐரோப்பியத் தோழியுடன் சென்னை வந்திருந்த போது நான் அவர்களை அங்கே சந்தித்தேன். ஐரோப்பியப் பெண்ணுடன் சென்றதால் எப்போதும் கிடைத்திராத ராஜ மரியாதை கிடைத்தது. பார் பணியாளர் வலது முழங்காலை தரையில் மடித்து வைத்து அமர்ந்து ~ஆர்டர்| கேட்டார். அப்போது ஷோபா சக்தி தய். கந்தசாமியையும் அங்கே அழைத்தார். உடனே நான் கந்தசாமியிடம் எப்படியாவது ஒரு ஷ_வையும் அணிந்து கொண்டு வருமாறு கூறினேன். சட்டக் கல்லு}ரியில் படித்துக் கொண்டிருந்த அவரும் அந்தப்படியே தன் பக்கத்து அறை நண்பனிடம் கடன் வாங்கி ஷ_வை மாட்டிக் கொண்டு வந்திருந்தார். ஆனாலும் ஓட்டல் வாசலிலேயே அவரை நிறுத்தி விட்டார்கள். மேட்டுக்குடி வர்க்கத்தினருக்குரிய மேனி மினுமினுப்பு அவரிடம் இல்லாததும், விலையுயர்ந்த காரில் வந்து இறங்காததுமே காரணம். அவரிடம் கைத்தொலைபேசி இல்லாததால் வேறெங்கோ சென்று எங்களை தொலைபேசியில் அழைத்து விபரம் சொன்னார். பிறகு ஷோபா சக்தியின் ஐரோப்பியத் தோழி சென்று கந்தசாமியை தோளில் கைபோட்டு அழைத்து வந்தார். ஐரோப்பியப் பெண்ணே இப்படி அழைத்து வந்ததைப் பார்த்து காவல் காப்பாளர் ~ஸலு}ட்| அடித்து உள்ளே விட்டார். ஆனாலும், பார் பணியாளர் எங்களை பாருக்குள் அனுமதிக்காமல் வெளியே லவுஞ்ஜூக்கு செல்லும்படி கூறிவிட்டார். எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதைப் பார்த்து அந்தப் பெண் சுயஉளைஅஇ சயஉளைஅ என்று கூச்சலிட்டபடி வெளியேற, அவரைத் தொடர்ந்து நாங்கள் மூவரும் வெளியேறினோம்.
கிராமங்களில் ரெட்டை க்ளாஸ் முறை நடைமுறையில் இருக்கிறதே, அது இங்கே நம் கண்ணெதிரே நட்ட நடு அண்ணா சாலையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதுபோல் ஒரு முறையல்ல@ பலமுறை நடக்கவே நான் அங்கு செல்வதை நிறுத்தினேன். பின்னர், ஒரு ஆண்டுக்குப் பிறகு சென்ற மாதம் வேறொரு நண்பரோடு சென்ற போதும் இதேபோல் நடந்தது. அந்த நண்பரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
எனவே, பிரஸ்தாப நாளிதழில் பொறுப்பாசிரியராக உள்ள என் நண்பரிடம் இவ்விஷயம் பற்றிக் கூறினேன். சில தினங்களில் அந்தப் புகழ்பெற்ற புகைப்படம் அந்நாளிதழில் வெளியானது.
இச்சம்பவம் பற்றி ஒரு இணைய தளத்தில் எழுதியிருக்கும் கனிமொழி அந்நாளிதழைக் கண்டித்திருக்கிறார். நன்று. அது அவரது உரிமை. ஆனால் அதே சமயத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்ட ஒரு மாலை தினசரியை மட்டும் ஏன் விட்டு விட்டார்? மேலும், குஷ்பு விஷயத்தைப் பெரிதுபடுத்தி பூதாகாரமாக்கியதும் அந்த மாலை நாளிதழ்தான். அதோடு, ஏதோ உலகப் போர் மூண்டு விட்டது போல் இன்றளவும் குஷ்பு செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் அந்தத் தனியார் தொலைக்காட்சியையும் ஏன் கண்டிக்காமல் விட்டார். தனக்கு வேண்டியவர்களை விட்டு விட்டு அந்நியர்களை மட்டும் விமர்சிக்கும் போக்கு கனிமொழி போன்றவர்களிடம் கூட இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே ஒவ்வொரு Pரடிஆகச் சென்று, அங்கே குடித்துக் கொண்டிருப்பவர்களை விரட்டியடித்துக் கொண்டிருந்த கமிஷனர் கையில் இப்படி ஒரு புகைப்படமும் கிடைத்தால் சும்மாவா விடுவார்? சீறிப் புறப்பட்டார். ஓட்டலின் உரிமமே ரத்து செய்யப்படும் நிலைக்குப் போய்விட்டது. ஓட்டலின் மேனேஜர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை. அந்தப் புகைப்படத்தில் உள்ளவர்களையும் தேடிக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று வேறு கூறியிருக்கிறார் கமிஷனர். கலாச்சாரம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் தனி மனிதர்களின் அந்தரங்க வாழ்வில் எவ்வளவு து}ரம் அத்து மீற முடியும் என்பதற்கான ஒரு உதாரணம் இது. இனிமேல் நீங்கள் உங்கள் காதலியை முத்தமிடுவதற்குக் கூட காவல் துறையிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும்!
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்... போலீஸ் துறை என்பது முதலமைச்சருக்குக் கீழ் இயங்குகிறதா? அல்லது, பத்திரிகைகளின் உப பிரிவாகவா? இதற்கிடையில், ஒரு பொறியியற் கல்லு}ரி மாணவன் அவன் சிவப்பு நிற சட்டை அணிந்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறான். அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மாணவிகள் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிவதைத் தடை செய்த பிறகு நடந்த சம்பவம் இது. காரணம், மாணவர்கள் வெளிர் நிற ஆடைகள்தான் அணிந்திருக்க வேண்டும் என்பது அந்தக் கல்லு}ரியின் ட்ரஸ் கோட். இது போல் இன்னும் பல கல்லு}ரிகளில், மாணவன் - மாணவி ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்கும் தடையிருக்கிறது. மீறினால் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.
இதே சமயத்தில்தான் சானியா மிர்ஸாவின் உடை பற்றிய வாதப் பிரதிவாதங்களும் எழுந்தன. டென்னிஸ் விளையாட்டில் பெண் ஆட்டக்காரர்களின் உடை குறைந்து கொண்டே போய் ஒரு செக்ஸ் ஷோ என்னும் அளவுக்கு ஆகிவிட்டது என்பது உண்மைதான். சானியா ஆடும்போது உள்ளாடை தெரிகிறது. ஆனால் உள்ளாடையைப் பார்க்காமல், அவரது கரங்களைப் பாருங்கள் என்று எழுதியது ஒரு ஆங்கில தினசரி. பாலியல் பற்றிய புரிதலற்ற, பாலியல் வறுமை கடுமையாக நிலவும் ஒரு சமூகத்தில் ஆண்களிடம் அப்படிக் கோருவது மிகவும் குரூரமானது என்று நினைக்கிறேன்.
இது விஷயமாக ஆண்கள் என்ன செய்ய முடியும் என்றால், அப்படி உடை அணியும் பெண்களிடம் வேண்டுகோள் விடுக்கலாம். அவ்வளவுதான் சாத்தியம்.
மேலும், பெண்கள் 75 சதவிகிதம் உடலை மறைத்து ஆடை அணியும் இந்தியா போன்ற தேசத்தில்தான் ஓரிரு பெண்களின் பயங்கரமான ஆடைக்குறைப்பு என் மனதை சஞ்சலப்படுத்துகிறது. தாய்லாந்து போன்ற தேசத்தில் எல்லாப் பெண்களுமே மிகக் குறைந்த ஆடை அணிவதால் அதற்கேற்ப என் உணர்வும் பழகிப் போய் விடுகிறது.
செக்ஸ் ஒரு அசிங்கமான விஷயம் என்பது போன்ற நம்பிக்கைகள் உள்ள ஒரு தேசத்தில் மனமும் உடலும் இந்த நம்பிக்கைக்கேற்பவே மாறிப்போய் விடுகின்றன. உதாரணமாக, ஒருவர் தன் தோழியுடன் சென்று எங்குமே செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. போலீஸ் ரெய்டு செய்தால் அவர் அப்பெண்ணுடனான தன் திருமணச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். செக்ஸை விடுங்கள். அவளோடு அவர் ஒரு பூங்காவிலோ, கடற்கரையிலோ கூட அமர முடியாது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா நகர் பூங்காவில் காலை பத்து மணி அளவில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஒரு டஜன் ஜோடிகளைப் பிடித்த போலீஸ், அந்தப் பெண்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி, ஆண்களை வேலு}ர் ஜெயிலில் அடைத்தது. அதனால் ஒரு வாலிபருக்கு மனச் சிதைவு நோய் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நோய் பிடித்த சமூகத்தில் - செக்ஸ் உணர்வுகள் கலாச்சார லத்தியால் ஒடுக்கப்பட்டு வரும் சமூகத்தில் - அதன் கோடிக்கணக்கான மத்தியதர வர்க்க எiஉவiஅகளில் ஒருவனான நான் எப்படி உள்ளாடையைப் பார்க்காமல் கரங்களைப் பார்க்க முடியும்?
பெண்களின் உடை விஷயத்தில் கருத்து கூறிய பலருள் முன்னாள் துணை வேந்தரான வசந்தி தேவியின் கருத்துக்கள் சிந்திக்கத்தக்கவையாக இருந்தன. கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரத்தை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகக் கருதுகிறார் அவர். ஆனால் அதற்காக வயதானவர்களெல்லாம் கலாச்சார போலீசாக மாறுவதை அவர் கண்டிக்கிறார். ~~வரலாறு நெடுகிலும் அதிகாரத்தில் இருப்பவர்களே - அவர்கள் பெற்றோராக இருந்தாலும் சரி, அரசு அமைப்பாக இருந்தாலும் சரி - இளைஞர்களின் ஒழுக்கத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்... தொடர்ந்த மாற்றத்திலிருக்கும் ஒரு சமூகத்தில் இன்று இளைய சமுதாயம் எதிர் கொள்ளும் குழப்பங்கள் இதனால் (கலாச்சாரக் காவலர்களின் தலையீட்டினால்) மலினப்படுத்தப்பட்டு விடுகின்றன.|| (இந்து:29.09.2005).
இவ்வாறு பலவிதமான கேள்விகளாலும் குழப்பங்களாலும் மன உளைச்சலுக்கு ஆளான நான் புறநானு}ற்றை எடுத்து அவ்வையாரின் பாடல்களைப் புரட்டினேன். சிறிய கட் பெறினே, எமக்கு ஈயும்@ மன்னே! பெரிய கட் பெறினே, யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும், மன்னே! (கொஞ்சம் கள் கிடைத்தாலும் எங்களுக்குக் கொடுப்பான்ஃநிறைய கள் கிடைத்தாலும் நாங்கள் பாடஃதான் மகிழ்ந்து சேர்ந்து உண்பான்.)
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்ஃஒன்று இருமுறை இருந்து உண்ட பின்றை, (புலியின் கண்கள் போலச் சிவந்த கள்ளைஃஇரண்டு முறை உண்டபின்)
....... என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
திருமலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
(நீர்ப்பாசி போன்ற என் பழைய உடைகளை நீக்கிஃ புது மலர் போல புதுசு உடுத்தச் சொல்லிஃகள்ளும், மாமிசத் துண்டுகளும் கலந்த சோறைஃவெள்ளிப் பாத்திரத்தில் அளித்தான்.)
தேட் கடுப்பு அன்ன நாட்படு தேறலஃ; கோள் மீன் அன்ன பொலங் கலந்து அளைஇ, (தேள் கொட்டுவது போல சுhPர் என்னும் சுவை தரும் புளித்த கள்ளை பொன் கிண்ணத்தில் ஊற்றி அளித்தான்.)ழூ தனக்கும் மன்னன் அதியமானுக்கும் இடையிலான நட்பு பற்றி அவ்வையார் பாடிய பாடல்கள் இவை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியிருந்த தமிழ்ச் சமூகமா இன்று மது அருந்துபவர்களையும் முத்தமிடுபவர்களையும் நோக்கி லத்தியுடனும் விளக்குமாற்றுடனும் பாய்கிறது?
புறநானு}று - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா. உயிர்மை பதிப்பகம்.)
(ENDS) |
|