. Uthayam .
Proudly hosted by

PC users
.
MANY COMMUNITIES; ONE HUMANITY.
- UTHAYAM - .
.
.
. எம்.ஜி. யாரும் சுந்தர ராமசாமியும்


சுந்தர ராமசாமியின் மறைவுச் செய்தியை எனக்கு மனுஷ்ய புத்திரன் ~எஸ்ஸெம்மெஸ்| செய்தபோது பதிலுக்கு நான் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன். எம்.எஃப் ஹ_சேன் மாதிரி, குஷ்வந்த் சிங் மாதிரி 90 வயதுக்கு மேலும் இளைஞராக வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றியது. அதற்கு மேல் எதுவுமில்லை. என் அம்மாவின் மரணம் கூட என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சுமார் 75ஆண்டுகள் - ஒருநாள் கூட நோய் நொடி என்று படுக்காமல் வாழ்ந்து முடித்த ஒரு ஏழைப் பெண்மணியின் மரணம் - நிறைவான வாழ்வு அது. கொண்டாடத் தகுந்த மரணம் என்று தோன்றியதால் முட்ட முட்ட மது அருந்தினேன். ஆனால் என் சகோதரனின் மனைவி முப்பது வயதில் இரண்டு சிறு குழந்தைகளை விட்டு விட்டு மர்மமான முறையில் குரூரமாக இறந்த போது (நன்கு நீச்சல் தெரிந்த மீனவர் சமூகத்தைச் சேர்ந்த அவள் ஏழடி ஆளமுள்ள ஒரு சிறிய நீர்த் தொட்டியில் மூழ்கி இறந்து போனாள்) அடக்க முடியாமல் அழுதேன். அதுதான் மரண சம்பவத்தின்போது நான் அழுத முதலும் கடைசியுமான அழுகை.
(மற்றபடி தமிழ், இந்தி, ஹாலிவுட் சினிமாக்களைப் பார்த்து பலமுறை அழுததுண்டு. இரண்டு ஹாலிவுட் சினிமாக்கள் உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன. பேர்ள் ஹார்பர், டைட்டானிக். இரண்டு படங்களின் மையக்கருவும் காதல்)
சுந்தர ராமசாமியின் மரணத்தைப் போல் தமிழ் எழுத்தாளர்கள் வேறு எந்த எழுத்தாளரின் மரணத்தையும் எதிர்கொண்டதில்லை. அவ்வகையில் அவர்கள் ஒரு எம்ஜியார் ரசிகனின் மனோநிலையிலேயே இருந்தார்கள். சுராவின் உடலைப் பார்த்து கதறி அழுதார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்கள் துயரத்தையும் பதற்றத்தையும் மறக்கக் குடித்தார்கள். குடிப்பழக்கம் இல்லாதவர்களும் தம் வாழ்வில் முதல்முறையாகக் குடித்தார்கள்.

சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் சென்ற ரயில் ஒரு சாவு ரயில் போல இருந்தது என்று எழுதுகிறார் மனுஷ்ய புத்திரன். ஆனால், கிர்கிஸ்தான் என்ற தேசத்தில் அஸ்க்கர் அக்காயேவ் என்ற பெயர் கொண்ட ஒரு எழுத்தாளர் இறந்து போனார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும்போது எப்படி உணர்வேனோ, அந்த அளவில்தான் சுராவின் மரணம் என்னுள் பதிந்தது. காரணம், ஆரம்ப காலத்திலிருந்தே அவருடைய எழுத்து என்னைக் கவரவில்லை. மௌனி, கு.ப.ரா, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லா.ச.ரா, ஆதவன், அசோக மித்திரன், ஜி. நாகராஜன் என்று பல எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட நான் சுராவின் எழுத்தால் என்றுமே ஈர்க்கப்பட்டதில்லை. மாறாக, அதிலுள்ள pseudo-intellectual தன்மை எனக்கு எப்போதும் எரிச்சலையே ஏற்படுத்தி வந்தது. புளிய மரத்தின் கதை - ஒரு mediocre படைப்பு. ~ஜே.ஜே. சில குறிப்புகள்| ஒரு fake novel. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - என்ன முயன்றும் என்னால் முதல் பக்கத்தையே தாண்ட முடியவில்லை. பரிசோதனைச் சாலையில் தீவர ஆராய்ச்சியில் இருக்கும் விஞ்ஞானியை எல்.கே.ஜி வகுப்பில் அமரச் செய்தால் எப்படியிருக்குமோ அதே விதமாகத்தான் அந்த நாவலைப் படிக்க முயற்சித்தபோது உணர்ந்தேன். பிறகு, அவ்வளவுது}ரம் என்னை சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாமென்ற எண்ணத்தில் முதல் பக்கத்தோடு விட்டு விட்டேன்.

சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்களின் எழுத்து பிடிக்காது. ஆனால் ஆளைப் பிடிக்கும். அப்படி ஒரு எழுத்தாளர் கோணங்கி. அவரது பேச்சு எதிராளியை வசியம் செய்யக் கூடியது. ஏதோ ஒரு மாயாவியிடம் வந்து சேர்ந்து விட்டதைப்போல் தோன்றும் உங்களுக்கு,

ஆனால் சுரா என்னை அப்படியும் ஈர்க்கவில்லை. நான்கைந்து தடவைகள் அவருடன் அளவளாவியிருக்கிறேன். ஒருமுறை குடித்தும் இருக்கிறேன். இருந்தும் என்னை அவரிடமிருந்து து}ர விரட்டியது, மனித உறவுகளில் அவருக்கு இருந்த ~வர்த்தக| அணுகுமுறை.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் நண்பனும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குச் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை நேரத்தில் நாகர்கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் சுராவைப் பார்த்து விட்டுப் போகலாமா என்று கேட்டான். அவன் சுராவின் ஆயிரக்கணக்கான விசிறிகளில் ஒருவன்.

முகமன் கூறி வரவேற்ற பின், சுரா என்னிடம் பேசிய முதல் வாக்கியம் இது:
~~இப்போது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பலபேருக்கு உழஅஅரniஉயவழைn ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. தாங்கள் சொல்ல நினைப்பதை அவர்களால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் உங்கள் எழுத்தில் அந்தப் பிரச்சனை இல்லை. மிக லகுவாக இருக்கிறது. இது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம்.||

சுரா என்ற மனிதர் மீது நான் கொண்டிருந்த மரியாதை சட்டென்று கீழே இறங்கியது. ஏனென்றால், சுரா என் எழுத்தின் மீதான அவரது இந்த நல்லபிப்பிராயத்தை எழுத்தில்தான் முன் வைத்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்ததில்லை. மாறாக, ஒரு கட்டுரையில் ~மேற்கில் தமது மூளையை அடகு வைத்தவர்கள்| என்று கிண்டலாக எழுதியவர் சுரா.

பெயரைக் குறிப்பிட்டாலே தீட்டு என்ற மனோபாவமோ என்னவோ... மேற்கில் அடகு வைத்தவர்களின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. குறிப்பிடாவிட்டாலும் படிப்பவர்களுக்குப் புரியும். எண்பதுகளில் மேற்கத்திய சிந்தனைகளை முன்வைத்து இங்கே விவாதித்துக் கொண்டிருந்தவர்கள் : தமிழவன், நாகார்ச்சுனன், ஸில்வியா மற்றும் நான்.

சுராவும் க.நா.சுவின் வழியில் மேற்கத்திய இலக்கியத்தைப் படித்து எழுதியவர்தான். ஆனால், அவருடைய படிப்பு எல்லை கா.ப்கா. ஆக, கா.ப்காவைப் படித்தால் சிலாக்கியம்@ ஃபூக்கோவைப் படித்தால் அது மேற்கில் மூளையை அடகு வைக்கும் செயல்!
இப்படி எழுத்தில் கிண்டல் செய்துவிட்டு நேரில் பாராட்டு!
மற்றொரு முறை, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரில் அவர் வழக்கமாகத் தங்கும் விடுதியில் சந்திக்க நேர்ந்தது. ~பேச்சினு}டாக உங்களுக்குப் பிடித்த மேற்கத்திய எழுத்தாளர் யார்?| என்று கேட்டார். ~வ்ளதிமீர் நபக்கோவ்| என்றேன். ~அப்படியானால் தர்மு சிவராமுவையும் உங்களுக்குப் பிடிக்குமே?| என்றார்.

பிடிக்கும் அல்ல. I belong to Dharmu Sivaramoo school என்று பதில் கூறினேன்.
***
தமிழ் எழுத்து உலக இல்க்கியத்தோடு ஒப்பிடும்போது இன்று Pணமான நிலையில் இருப்பதற்குக் காரணம் இப்போது எனக்குத் தெளிவாக விளங்குகிறது. சுராவைப் போன்ற ஒரு பலஹீனமான எழுத்தாளரை தங்கள் ஆதர்ஸமாகக் கொண்ட எழுத்தாளர்கள் எப்படி ஒரு காத்திரமான படைப்பை உருவாக்க முடியும்?

மேலும், இந்த எழுத்தாளர்களுக்கு தமிழில் வேறு ஒரு ~பள்ளி| இருந்து வருவதைப் பற்றிய பிரக்ஞை சிறிதளவு கூட கிடையாது. இதற்குக் காரணமும் சுராதான். ஏனென்றால், அந்த மாற்றுப் பள்ளியைப் பற்றி அவர் எப்போதுமே வாய் திறந்ததில்லை. அப்படி ஒரு பள்ளி இருப்பதை கவனத்தில் கொண்ட அறிகுறியும் கூட அவரிடம் இருந்ததில்லை.

அந்தப் பள்ளியின் முக்கியமான கலைஞன் என நகுலனைக் கூறலாம். அப்பள்ளியைச் சேர்ந்தவராகவே தர்முசிவராமுவையும் நான் மதிப்பீடு செய்கிறேன். இவர்களையே என் எழுத்தின் முன்னோடிகளாகக் கருதுகிறேன். என் எழுத்தின் சரடு இவர்களிடமிருந்தே தொடங்குகிறது.

நகுலனின் பள்ளியில் பளீரென்ற விளக்குகள் கிடையாது. வெளவால்கள் தலைகீழாய்த் தொங்கும் பாழடைந்த மண்டபத்திலேயே இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் சாராயம் குடித்து விட்டும் படுத்துக் கிடக்கிறார்கள். நகுலனின் மெலிந்த உருவம் சிம்னி விளக்கைக் கையிலேந்தியபடி என் பெயர் என்ன என் பெயர் என்ன என்று சன்னமான குரலில் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறது.

நகுலன், சுந்தர ராமசாமி என்ற இந்த இரண்டு பள்ளிகளுக்கான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள மனுஷ்ய புத்திரனின் இரங்கல் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோளைத் தருகிறேன்:
~~அவர் (சு.ரா.) மிகவும் சிறிய வயதிலிருந்தே ~பெரிய மனிதராக| இருந்து வந்திருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு அடிக்கடி எழும். பிறழ்வும் உதாரித்தனமும் மடத்தனமான காரியங்களும் தரும் நிச்சயமின்மை எதுவும் சு.ரா. விடம் இல்லை.||
***
சுந்தர ராமசாமியின் மரணத்தினால் பதற்றமுறாத நான், தமிழ் எழுத்தாளர்கள் அவரது மரணத்தை எதிர் கொண்ட விதத்தைக் கண்டு மிகுந்த பதற்றமடைந்தேன். ஒரு அரசியல் தலைவர் அல்லது சினிமா நடிகரின் மறைவையே அது எனக்கு ஞாபகப்படுத்தியது.

சு.ரா. மறைந்த அதே சமயத்தில்தான் காஷ்மீரில் (பாகிஸ்தான்) நிலநடுக்கம் ஏற்பட்டு பல நு}று கிராமங்கள் மண்ணோடு மண்ணாகிப் போயின. பல ஆயிரம் பேர் கோர மரணமடைந்தனர். உயிர் பிழைத்தோரின் நிலைமை இறந்தவர்களைவிட மோசமாக இருந்தது. கடுமையான குளிர். அடை மழை. வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. உணவில்லை. ஒதுங்க இடமில்லை. குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கம்பளி உடைகளில்லை. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதியில்லை. பக்கத்திலிருக்கும் இந்தியப் பகுதிக்குச் சென்று விட்டால் ஏதேனும் கிடைக்கலாமென்று ஓட முயன்றவர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்த நிலையில்தான் எனக்குச் சில நண்பர்கள் தீபாவளி வாழ்த்துச் சொன்னார்கள். சில நண்பர்கள் சு.ரா.வின் மறைவுச் செய்தி சொன்னார்கள்.
அழகிய பெரியவன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ~~ஊரே அழிந்தாலும் பரவாயில்லை@ இந்தத் தமிழ் எழுத்தாளர்களுக்கு தங்கள் சொந்தத் துயரம்தான் பெரிதாக இருக்கிறது|| என்று கூறினார்.

சு.ரா.வின் மறைவை தங்கள் வீட்டுத் துக்கமாக அனுஷ்டித்த அத்தனை எழுத்தாளர்களும் இங்கே நடந்த எந்தச் சமூக நிகழ்வுகளுக்கும் தங்கள் சுட்டு விரலையும் அசைத்தது கிடையாது. அது குஜராத் படுகொலையானாலும் சரி@ பக்கத்தில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையாக இருந்தாலும் சரி. (விதி விலக்காகத் தெரிபவர் : மனுஷ்ய புத்திரன்)
***
வழக்கம்போல் ஜெயமோகன் ஒரு 40 பக்க (இரங்கல்) கட்டுரையை எழுதியிருக்கிறார். தேவைதான். சுராவின் இலக்கிய வாரிசு இதைச் செய்துதான் ஆக வேண்டும்.

உண்மையில் சு.ரா.வின் மரணம் ஜெயமோகனின் ~விஷ்ணுபுரம்| வெளிவந்த போதே நிகழ்ந்து விட்டது. அதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்திருக்கலாம் - அவரது வழக்கமான தந்திரத்தைப் பயன்படுத்தி. ஆனால் ஜெயமோகனின் பூதாகாரமான காபாலிகச் செயல்பாடுகள் சு.ரா. போன்ற ஒரு British Gentleman நிலைகுலையச் செய்து விட்டன. தன் மார்பெங்கும் மண்டையோடுகளைத் தொங்க விட்டபடி பேய்க் கூத்தாடும் ஒரு உருவத்தையும், இந்தி சினிமாவில் கதாநாயகியின் தகப்பானராக வரும் ஒரு நாகாPக கனவான் தோற்றத்தையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் சொல்வது புரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் - எனது பரிச்சயக்காரர் ஒருவர் தான் ஜெயமோகனின் விசிறி எனவும், அவரது முகவரி இருந்தால் ஒரு அஞ்சலட்டை எழுதலாம் எனவும் விருப்பம் தெரிவித்தார். முகவரியைக் கொடுத்தேன். முகவரியைக் கொடுத்த மூன்றாம்நாள் ஜெயமோகனிடமிருந்து 30 பக்கங்களில் அந்த வாசகருக்கு ஒரு கடிதம் - தான் எழுதிக் கொண்டிருக்கும் ~அசோக வனம்| என்ற நாவலைப் பற்றி விவரித்து. நண்பர் எழுதியதோ ஒரே ஒரு அஞ்சலட்டை. அதற்கு இப்படி ஒரு பதில்.

ஜெயமோகனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ~மம்மி| என்ற ஆங்கிலத் திரைப்படம் ஞாபகத்திற்கு வரும். ஒரு கட்டத்தில் அந்த மம்மி தனது பூதாகாரமான வாயைத் திறக்கும்போது லட்சக்கணக்கான தேனீக்கள் அதன் வாயிலிருந்து புறப்பட்டு வரும். ஜெயமோகனுக்கு சொற்கள். அநேகமாக இந்த உலகில் அதிக பக்கங்கள் கடிதம் எழுதியவர் அவராகத்தான் இருப்பார். அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம் :
~~காசர்கோடு திரும்பியதும் தொலைபேசி நிலைய ஓய்வறையில் அமர்ந்து சுந்தர ராமசாமிக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினேன். ஏறத்தாழ முப்பது பக்கம். அவருக்கு நான் எழுதிய சிறிய கடிதங்களில் ஒன்று இது. பிறகு அவரது கவிதைகளைப் பற்றி முந்நு}று பக்கக் கடிதம் கூட ஒன்று எழுதியிருக்கிறேன்.||

அதே hPதியில் இப்போது சு.ரா.வுக்கான அஞ்சலிக் கட்டுரையையும் உயிர்மையில் 40 பக்கங்களில் எழுதியிருக்கிறார். இந்த பூதாகாரத்தின் முன்னால் சுராவின் வழக்கமான தந்திரம்கூட அடிபட்டுப் போயிற்று. வழக்கமான சுராவாக இருந்திருந்தால் ~ஜெயமோகன்தான் என் இலக்கிய வாரிசு| என அறிவித்து தன் தோள் மீது ஏறிநின்ற ஜெயமோனைக் கீழே தட்டிவிட்டு அவர் தோள்மீது தான் ஏறி நின்றிருப்பார். ஆனால் ஜெயமோகனின் மண்டையோட்டு மாலை சுராவை நிதானமிழக்கச் செய்து, நிலைகுலைய வைத்து விட்டது. சுராவினுடைய வீழ்ச்சியின் முதல் அறிகுறி அது.
***
தமிழ்ச் சமுகத்தின் கலாச்சார அவலம் குறித்து சுரா தீராத கோபம் கொண்டிருந்தார் என்பதாக ஒரு வதந்தி உலவி வருகிறது. ஆனால் அது உண்மையான கோபமா அல்லது மிகத்தீவிரமான சுய அபிமானத்தினால் ஏற்பட்ட சுய இரக்கத்தை மறைத்துக் கொள்ள அணிந்து கொண்ட முகமூடியா என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது. இச் சந்தேகங்களை நான் சுரா விசிறிகளின் பார்வைக்கு வைக்கிறேன்.
1. உலக இலக்கிய அரங்கிற்கு நாம் பெருமையாகக் கொண்டு சேர்க்கக்கூடிய நகுலன், தர்முசிவராமு என்ற இருவரைக் குறித்து சுரா தன் வாழ்நாளில் வாய் திறக்காதது ஏன்? அவர்கள் சுராவை ஒரு சீரிய இலக்கியவாதியாக என்றுமே அங்கீகரித்ததில்லை என்ற ஒரே காரணம்தானே?
2. தன் புதல்வர் திரு.கண்ணனின் இலக்கியத்துக்குப் புறம்பான காரியங்களை சுரா வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தது ஏன்?
சங்கரராமசுப்ரமணியன் என்ற கவிஞருக்கு குமுதம் பத்திரிகையிலிருந்து வேலை போயிற்று. காரணம்: கண்ணன். பிறகு, தளவாய் சுந்தரம் என்ற எழுத்தாளரை குமுதத்திலிருந்து நீக்க அப்பத்திரிகை மறைமுகமாகவும், நேரடியாகவும் அச்சுறுத்தப்பட்டது. (~அன்னார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குமுதம் மீது கிரிமினல் வழக்குப் போடப்படும் என்ற அறிவிப்பு காலச் சுவடில் வெளிவந்தது.) பிறகு, வெங்கட் சாமிநாதனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வெ.சாவுக்கு இப்போது 75 வயது இருக்கலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விடபத்தில் மாட்டி கால் முறிவு ஏற்பட்டு, ஒரு ஆண்டுக்குமேல் படுக்கையில் கிடந்து, இப்போதும் கைத்தடியுடன் விந்தி விந்தி நடப்பவர் அவர். தமிழ் இலக்கிய, கலாச்சார சு10ழலில் ஐம்பது ஆண்டுகளாக இயங்கி வருபவர். (உண்மையில் சுராவின் பங்களிப்பை விட வெசாவின் பங்களிப்பு அதிகம். ஆனால் தமிழ்நாடு கவர்ச்சிப் பூச்சுக்கும், அரிதார மகிமைக்கும், அலங்கார பீடங்களுக்கும், பொருளாதார hPதியான செல்வாக்குக்குமே மதிப்புக் கொடுக்கும் இடம் என்பதால் வெசாவின் பங்களிப்புக்கு இங்கே அங்கீகாரம் கிடைக்காது. அதில் ஆச்சரியமுமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வெ.சா, சுராவின் 50 ஆண்டுக் கால நண்பர். குடும்ப நண்பர். அதாவது, தனது பெரியப்பாவாக மதித்துப் போற்றப்பட வேண்டிய ஒருவருக்கு - தன் தந்தையின் 50 ஆண்டுக்கால நண்பருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திரு. கண்ணன்.

இதற்குப் பதிலாக மன்னிப்புக் கடிதம் அனுப்பி வைத்து விட்டார் வெசா. காரணம் என்ன என்று கேட்டபோது ~மடிப்பாக்கத்திலிருந்து பாரி முனையிலிருக்கும் உயர்நீதி மன்றத்துக்கு என்னால் பஸ்ஸில் போய் அலைய முடியாதே?| என்று கூறினாராம். வெசாவின் 50 ஆண்டுகால உழஅவைஅநவெ-உம் அவ்வளவுதான்!

அதனால்தான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன். தமிழ் எழுத்தாளர்கள் தங்களை இன்னும் அவர்களே எழுத்தாளர்களாக நம்பவில்லை@ அங்கீகரித்துக் கொள்ளவுமில்லை.

ஒரு வக்கீல் நோட்டீஸ_க்கே மன்னிப்பு என்றால், இன்னும் சல்மான் சுஷ்டிக்கு நடந்த மாதிரியெல்லாம் நடந்திருந்தால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்துப் பார்ப்பதற்கே கூச்சமாக இருக்கிறது.

துருக்கி எழுத்தாளர் Orhan Pamuk 'தங்கள் நாட்டு ராணுவம் ஆர்மீனிய கிறித்தவர்களை இனப்படுகொலை செய்தது என்று கூறியதற்காக இப்போது தேசத் துரோகக் குற்றத்தை எதிர்கொண்டுள்ளார். குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக, ~நான் அப்படித்தான் சொன்னேன்| என்று கூறியிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, சு.ரா.வுக்கு இரங்கல் கட்டுரை எழுதிய அத்தனை பேரும் சு.ராவின் புதல்வர் செய்த அவ்வளவு அதர்மமான காரியங்களுக்கும் சு.ரா. மௌனம் சாதித்து அங்கீகரித்தாரே, அதை ஏன் குறிப்பிடவில்லை? வேடிக்கை என்னவென்றால், கண்ணனால் வேலை பறிபோன சங்கர ராமசுப்ரமணியனும் சுராவுக்காக உருகோ உருகு என்று உருகியிருக்கிறார்!

ஒரு இளைஞனை வேலையை விட்டு நீக்கி அவனையும் அவன் குடும்பத்தையும் பட்டினி போடுவது எவ்வளவு பெரிய கொடூரம்? இதையெல்லாம் அரசியல்வாதிகள்தானே இதுவரை செய்து வந்தனர்? இப்படிப்பட்ட செயல்கள் தன் வீட்டுக்குள்ளேயே நடப்பதை சுரா ஏன் அனுமதித்தார்? ~தமிழ் வாழ்வின் மீது கவியும் இருட்டை விலக்க ஒரு டார்ச்சுடன் அலைந்து கொண்டிருந்தார் சுரா| என்று எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன். ஏன் நண்பா, சுராவின் டார்ச் அவரது வீட்டுக்குள் மட்டும் ஏன் வேலை செய்யவில்லை? தயவு செய்து பதில் கூறு.
****
சுராவைப் பற்றி நினைக்கும் தோறும் கூடவே எனக்கு எம்ஜியாரின் ஞாபகம் வரும். அது இப்போதும் வருகிறது. சுராவைப் பற்றிய துதிகள் பெரும்பாலானவை ~நமது எம்ஜியார்| பத்திரிகையில் வரத் தக்க அளவிலேயே அமைந்திருக்கின்றன. உதாரணமாக, ஜெயமோகனின் 40 பக்கக் கட்டுரையின் ஆரம்ப வரிகள் இவை: ~~1999இல் குற்றாலத்தில் மலையாள, தமிழ்க் கவிஞர்கள் இடையேயான ஒரு கவிதைப் பரிமாற்றத்தை நான் ~சொல் புதிது| சார்பில் ஏற்பாடு செய்திருந்தேன். அதில் சுந்தர ராமசாமி கலந்து கொண்டார். அவர் ஈடுபாட்டுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரையே கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்த எம். யுவன் அபாரமான பிரியத்துடன் என் காதில் மெல்ல ~அழகன்யா...| என்றார்.||

இதற்கு மேல் என்னால் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. என் மீது யாரோ வாந்தியெடுத்து விட்டதைப் போல் அருவருப்பாக உணர்ந்தேன்.

சுரா பிராமண சாதியில் பிறந்தவர். செல்வந்தர். எனவே அவருடைய அழகு அவருக்குக் கிடைத்த மற்ற பிதுரார்ஜித சொத்துக்களைப் போல் ஒரு சொத்து. கூடுதல் பளபளப்பு செல்வ நிலையால் ஏற்பட்டது. இவரது அழகை ~ரசித்த| யுவன் என்பவரும் பிராமண சாதியைச் சேர்ந்தவரே.

என் எதிர் வீட்டில் ஒரு பணிப்பெண் 500ரூ. மாத ஊதியத்தில் தினம் 10 நேரம் உடல் உழைப்பில் ஈடுபடுகிறாள். 20 வயதுப் பெண் 12 வயதைப்போல் தோற்றமளிப்பாள். தெருவில் வரும் மீன் விற்கும் பெண்கள். சாலை போடும் பெண்கள். இவ்வாறு கடுமையான உடல் உழைப்பில் ஈடுபவர்களின் தோற்றம் முப்பது வயது கூடுதலாகத் தெரியும். தோல் வறண்டு சுருங்கியிருக்கும். இவர்களெல்லாம் அழகற்று இருப்பதற்கு நாமும் காரணம்தானே? இந்தக் குற்றவுணர்வு (shame) இல்லாதவன் எப்படி எழுத்தின் பக்கம் வர முடியும்? நம் சக மனிதர்கள் அழகற்று இருக்கும்போது நம் ஜாதியாலும், செல்வ நிலையாலும் பிதுரார்ஜிதமாகக் கிடைத்த இந்த உயரத்தையும் சருமப் பளபளப்பையும் எப்படி அழகு என்று கொண்டாட முடியும்?

Geneticalஆகத் தொடர்ந்து வரும் ஒரு விஷயத்தில் ஒரு அரசியலும் இருக்கிறது. எம்ஜியார் ஒரு பிரபலமான மக்கள் தலைவராக ஆனதற்கு அவருடைய அழகும் ஒரு காரணம். ராஜீவ் காந்தியும் அப்படியே. இப்போது பிரபலமாகத் துவங்கியிருக்கும் ராகுல் காந்தியின் கதையும் அதேதான்.

கற்பனை செய்து பாருங்கள் ஜெகஜீவன்ராம் போன்ற ஒருவரை இந்திய மக்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா? காரணம், வெள்ளைதான் அழகு என்று இந்தியர்களின் ஆழ்மனதில் ஒரு இனவாத அழகியல் உணர்வு (racial aesthetics) படித்து கிடக்கிறது. இதே பொதுப்புத்திதான் யவன், ஜெயமோகன் போன்றவர்களிடமும் இயங்குகிறது. எனவேதான் இது போன்ற தமிழ் எழுத்தாளர்களை நான் புறக்கணித்து வருகிறேன்.
***


(ENDS)

Home
உள்ளடக்கம்
Newspapers
எழுத்தாளர் பக்கம்
Shopping
வண்ணாத்திக்குளம்
Notice Board
வாசகர் பக்கம்
Awards
அனுசரணையாளர்
Download
விலங்குப் பண்ணை
Contact Details
.
.
Sponsors
Bharathi
Academy

.com
.info
.net
.org
.
24 Hours
Troubleshooting
Computers & Networking
Software & Hardware

Call Kirushna
0408 300 111
.
Nelliaddy Mathya Maha Vidyalayam
.com
.info
.net
 
.org
 
.
www.Thamil.NET
.
.

. © 2001-2006 sponsored by M.M.Kirushna. Best view in 800 by 600 or higher pixels desktop area. TOP