. Uthayam .
Proudly hosted by

PC users
.
MANY COMMUNITIES; ONE HUMANITY.
- UTHAYAM - .
.
.
. விக்னேஸ்வரன் கொலை - நடேசன்


ஒரு மனிதன் தேவதையிடம் தனக்கு முத்து குவியல ;வேண்டும் என வரம் கேட்டான். தேவதை 'நீ அழூதால் வரும் கண்ணீர் ஒவ்வொன்றும் முத்தாகும்" என வரம் கொடுத்தது.

 அந்த மனிதன் அழத்தொடங்கினான். ஆனால் அழுகை வரவில்லை. இறந்து போன தாய் - தந்தையை நினைத்தான். சிறிதளவு வந்த கண்ணீர் துளிகள் முத்துகளாகின. பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து தனது குடும்பத்தை குத்தத் தொடங்கினான். கண்ணீர் ஆறாகப் பெருகி வீட்டில் முத்துகளாகின. கண்ணைத் துடைத்துக் கொண்டு சுற்றிப்பார்த்தபோது மனைவியும் ஒரே குழந்தையும் குத்தப்பட்டு இறந்து அருகில் கிடந்தன.

இது ஒரு ஆப்கானிய கதை.

திருகோணமலை பிரதேசத்தில் உள்ள கண்ணியா பிரதேசத்தில் மட்டுமே வென்னீர் வந்துகொண்டிருந்தது அந்தக்காலம். இப்பொழுது முழுமாவட்டமும் இனப்பூசலில் கொதித்துக்கொண்டிருக்கிறது. மூன்று இன மக்களும் சமமாக உள்ள இந்த பிரதேசம் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளினதும் பாதுகாப்புப் படைகளினதும் பலப்பாPட்சைக்கு உட்படுகிறது. சுனாமியால் இந்த மாவட்டத்தில் 1500 பேர் உயிர் இழந்ததும் 31000 மக்கள் வீடுகள் இழந்து, ஏற்பட்ட துன்பங்களில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

சித்திரை 7ம் திகதி இலங்கை வங்கியில் வேலை பார்த்த தமிழ் மக்கள் பேரவை தலைவர் விக்னேஸ்வரனின் கொலையுடன் உருவான நெருக்கடி நிலமை இன்னும தொடர்ந்து நடைபெறுகிறது. ஆரம்ப செய்திகளின்படி வங்கி வளாகத்தில் சுடப்பட்ட விக்னேஸ்வரன், பாதுகாப்பு படைகளாலோ அல்லது ஈழமக்கள் ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் இருந்து வந்த கருணா தரப்பினால் கொலை செய்யப்பட்டார் எனக் கூறப்பட்டது. கொலை செய்யப்பட்ட இவரது பூத உடல் சித்திரை 8ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர்பகுதியிலும் 9ம் திகதி வவுனியாவிலும் 10ம் திகதி முல்லைத்தீவு கிளிநொச்சி பிரதேசத்திலும் 11ம் திகதி திருகோணமலை நகரமெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பற்றிய இந்த ஊர்வலம் சிங்கள பகுதிகள் ஊடாகவும் எடுத்துச் செல்லப்பட்டதுடன் ஆர்ப்பாட்டமாகவும், கார், மோட்டார் வாகனங்களின் ஹோர்ன் சத்தங்களுடன் நடந்தது. வழியில் இருந்த சில இராணுவ காவல் அரண்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

விக்னேஸ்வரன் புலிகளால் 'மாமனிதர்" என கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்பிரல் 8ம் திகதி விக்னேஸ்வரனின் உடல் சம்பூரில் இருந்தபோது இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். 11ம் திகதி அடக்கம் செய்யப்படும் முன்பும் கடற்படையினர் சென்ற வாகனம் கிளைமோரால் தாக்கப்பட 10கடற்படையினரும் ஒரு சிவிலியன் வாகன சாரதியும் இறந்தார்கள். இந்த பஸ் வேறு வாகனத்தில் மோதி இரண்டு வெளிநாட்டவர் உட்பட ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.

இப்படி விக்னேஸ்வரனின் மரணத்தோடு பல தாக்குதல்கள் பாதுகாப்பு படைகளுக்கு எதிரே நடந்தன. உடனே திட்டமிடப்பட்டவையா? பலகாலம் முன்பு திட்டம்போட்டு பின்பு விக்னேஸ்வரனின் மரணத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில் புலிகள் செய்தார்களா? என்பது கேள்விக்குரிய விடயமாகும். நயினாதீவில் பிறந்த விக்னேஸ்வரன், சிறுவயதில் சிறந்த பேச்சாளி மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரன். ஏழாம் வகுப்பில் படித்தபோது எனக்கு முன் ராங்கில் இருந்தார். திருகோணமலையில் திருமணம் செய்தவர். உண்மையான தீவிர தமிழ் பற்றாளர் என்பதால் தமிழரசுகட்சி, பின்பு தமிழர் கூட்டணியின் ஆதரவாளர் ஆகினார். பின்னாளில் இவர் தலைமை தாங்கிய தமிழ் மக்கள் பேரவை புலிகளின் முன்னணி அமைப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் விக்னேஸ்வரன் வன்னிக்கு புலிகளின் வாகனத்தில் செல்வது என்பதன் மூலம் புலிகளின் தொடர்புகளும் பாதுகாப்பு படையினருக்கு தெளிவானவை. கடந்த ஒருவருடமாக விக்னே;ஸ்வரனின் புலிகளின் தொடர்பை கவனித்த எனக்கு இப்படியான ஒருவிடயம் நடக்கும் என எதிர்பார்த்தேன். புலிகளின் எதிரிகளால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பயந்தேன்.

தற்போது திருகோணமலையில் இருந்து கசிந்துவரும் விடயங்கள் எதிர்மாறாக இருக்கிறது. விக்னேஸ்வரன் சுடப்பட்ட காலை இளைஞர் ஒருவர் வந்து விக்னே;ஸ்வரனை ஜோசப் பரராஜசிங்கத்தின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு தெரிவு செய்ததற்காக பாராட்டினார் என்றும் பின்பு இவருடன் கன்hPனுக்கு செல்ல முற்பட்டபோது 'அண்ணை நீங்கள் எம்பியாவது உங்களுக்கு நல்லது. ஆனால் எங்களுக்கு நல்லது அல்ல" என்று கூறினாராம். வெளியே மோட்டார் சைக்கிளில் வந்தவரால் இவருக்கு வங்கி வாசலில் வைத்து சுடப்பட்டார். சுட்டவரும் அவரது மோட்டார் சைக்கிளிலும் பலரால் அடையாளம் காணப்பட்டது என்றும் தெரியவருகிறது.

புலிகள் தாங்கள் கொலை செய்துவிட்டு மற்றவர்களின்மீது பழிபோடும் பல சம்பவங்கள் சரித்திரத்தில் உள்ளது. மன்னார் தளபதி விக்டர் புலிகளால் கொலை செய்யப்பட்டும் வடபிரதேசம் முழுக்க பிரேத ஊர்வலம் போயினர். இதேபோல் யாழ்ப்பாண தளபதி ராதாவும்(ஹரிச்சந்திரா) கிட்டுவின் து}ண்டுதலால் கொலை செய்யப்பட்டவர். இந்த சந்தேகம் எனக்கு ஊர்ஜிதம் செய்ய 20 வருடங்கள் சென்றது. இதேபோல் விக்னேஸ்வரனின் கொலை பாதுகாப்புப்படைகளோ, அவர்களை சார்ந்தவர்களோ இல்லை புலிகளோ என ஊர்ஜிதம் செய்ய சிலகாலம் எடுக்கும் என நினைக்கிறேன்.
Home
உள்ளடக்கம்
Newspapers
எழுத்தாளர் பக்கம்
Shopping
வண்ணாத்திக்குளம்
Notice Board
வாசகர் பக்கம்
Awards
அனுசரணையாளர்
Download
விலங்குப் பண்ணை
Contact Details
.
.
Sponsors
Bharathi
Academy

.com
.info
.net
.org
.
24 Hours
Troubleshooting
Computers & Networking
Software & Hardware

Call Kirushna
0408 300 111
.
Nelliaddy Mathya Maha Vidyalayam
.com
.info
.net
 
.org
 
.
www.Thamil.NET
.
.

. © 2001-2006 sponsored by M.M.Kirushna. Best view in 800 by 600 or higher pixels desktop area. TOP